AANDAAL OIL Shop Logo

பாரம்பரிய தயாரிப்புதயாரிப்பு முறைகள்

விவசாயிகளிடம் நேரடியாகப் பெற்ற தரமான வித்துக்களைக் கொண்டு, எந்தவித ரசாயனமும் இன்றி வாகை மரச்செக்கில் தயாரிக்கப்படும் 100% தூய்மையான எண்ணெய்.

மரபுவழித் தயாரிப்பு

தயாரிப்பு முறைகள் & பயன்கள்

ஆண்டாள் பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் மற்றும் தானியங்களின் தனித்துவமான தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றின் அற்புதமான பயன்கள்.

கடலை எண்ணெய் தயாரிப்பு
மரச்செக்கு எண்ணெய்

கடலை எண்ணெய்

தரமான நாட்டு வேர்க்கடலையுடன் தனியா (கொத்தமல்லி விதை) சேர்த்து தயாரிக்கப்பட்டது. பித்தம், செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை தனியா நிவர்த்தி செய்துவிடுவதுடன், சமையலுக்கு தனிச்சுவையைக் கொடுக்கும். தவிர, சமைக்கும் போது வீடே கமகமக்கும்.

சமைக்க பலகாரங்கள் சுட
நல்லெண்ணெய் தயாரிப்பு
மரச்செக்கு எண்ணெய்

நல்லெண்ணெய்

தரமான எள்ளுடன், தூய்மையான பனங்கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்பட்டது. எள் இயல்பில் சூட்டுத்தன்மை உடையது. எள்ளிலிருந்து கிடைக்கும் எண்ணெய் குளிர்ச்சியானது. ஆக, சூட்டுத்தன்மை மிக்க ஒரு மூலப்பொருளில் இருந்து குளிர்ச்சித்தன்மையுடைய எண்ணெயை உருவாக்கும் ‘ரசவாதத்தை’ பனங்கருப்பட்டிதான் நிகழ்த்துகிறது.

சமைக்க இட்லி & பருப்புப் பொடிகளுடன் வாய் கொப்பளிக்க (Oil Pulling) எண்ணெய் குளியல் விளக்கேற்ற
தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
மரச்செக்கு எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

நன்கு தேறிய கொப்பரையுடன் (சல்பர் இல்லாதது) முதல்தரமான ஏலக்காய் & நாட்டு எலுமிச்சை சேர்த்து தயாரிக்கப்பட்டது. ஏலக்காய் மிகச்சிறந்த நறுமணம் தருவதுடன் செரிமானக் கோளாற்றை நீக்கும். எலுமிச்சம்பழம் எண்ணெயை நன்கு சுத்திகரிப்பதுடன், எளிதில் கெட்டுவிடாமலும் பாதுகாக்கும்.

சமைக்க கூந்தலுக்கு உட்கொள்ள (குடிக்க) உடலில் பூசிக்கொள்ள
மண்கட்டிய துவரம்பருப்பு தயாரிப்பு
பாரம்பரிய தானியங்கள்

மண்கட்டிய துவரம்பருப்பு

செம்மண்ணைக் குழம்பாகக் கரைத்து நாட்டுத்துவரைக்குப் பூசி ஒன்றாக குவித்து இரவில் உப்பவைத்து அவற்றைப் பிரித்து பகலெல்லாம் வெயிலில் உலர்த்தி (இவ்வாறாக இரண்டு நாட்கள் இவ்வாறாகப் பதப்படுத்தி துவரையை உடைத்து பருப்பையும் தோலையும் பிரித்து தூய்மைப்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதுதான் பாரம்பரிய முறையில் மண்கட்டிய துவரம்பருப்பு தயாரிக்கும் முறை.

சாம்பார் பருப்புப் பொடி பருப்பு உருண்டைக் குழம்பு மணமும் சுவையும் மிக்கது

பாரம்பரிய வாகை மரச்செக்கின் முக்கியத்துவம் என்ன?

மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் மரத்தின் தேர்வு மிக முக்கியமானது. வாகை மரம் (Albizia lebbeck) அதன் இயற்கையான மருத்துவக் குளிர்ச்சித் தன்மைக்கு பெயர் பெற்றது. எள்ளையோ அல்லது கடலையையோ செக்கில் அரைக்கும் போது உருவாகும் உராய்வு வெப்பத்தை இந்த வாகை மரம் முழுமையாக உறிஞ்சிவிடுகிறது. இதனால் எண்ணெய் மிதமான வெப்பநிலையிலேயே பிழியப்பட்டு, அதிலுள்ள ஊட்டச்சத்துக்களும், மருத்துவக் குணங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.

  • உயிர்ச் சத்துக்கள் (Enzymes) காக்கப்படும்
  • மிதமான வெப்பநிலை தயாரிப்பு
  • இயற்கையான நறுமணம் மற்றும் சுவை
  • இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
தேர்வு உங்களுடையது

மரச்செக்கு எண்ணெய் VS சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய்க்கும், ரசாயனங்கள் கலந்த சுத்திகரிக்கப்பட்ட (Refined) எண்ணெய்க்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்கள்:

தனித்துவ அம்சங்கள்
ஆண்டாள் மரச்செக்கு எண்ணெய்
சுத்திகரிக்கப்பட்ட (Refined) எண்ணெய்
எண்ணெய் பிழியும் வெப்பநிலை
மிதமான அறை வெப்பநிலை (30°C - 35°C)
அதிக வெப்ப நிலை (200°C+ வரை)
ரசாயன சுத்திகரிப்பு
பூஜ்ஜியம் (எந்த ரசாயனமும் இல்லை)
ஹெக்சேன், காஸ்டிக் சோடா மற்றும் ஆசிட் வாஷ்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் & வைட்டமின்கள்
100% முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது
அழிக்கப்பட்டு, செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது
இயற்கை நிறம் மற்றும் நறுமணம்
வித்துக்களின் இயற்கை நறுமணம் & அடர் நிறம்
நிறம் மற்றும் மணம் நீக்கப்பட்டு, சுவையற்றது
பாதுகாப்புப் பொருட்கள் & கலப்படம்
பூஜ்ஜியம் (எந்தப் பிரசர்வேட்டிவ்ஸும் இல்லை)
மினரல் ஆயில், செயற்கை நிறமூட்டிகள்

உயர்தர தூய்மையை இல்லத்தரசிகளுக்கு சமர்ப்பிக்கிறோம்

ஆண்டாள் பாரம்பரிய மரச்செக்கு எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகளை உங்கள் சமையலறைக்கு கொண்டு வாருங்கள். உங்கள் தேவைகளை ஆர்டர் செய்ய அல்லது கூடுதல் விவரங்களை அறிய எங்களை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள