AANDAAL OIL Shop Logo
எங்கள் பாரம்பரியம்

ஆண்டாள் -
கடந்து வந்த பாதை

பாரம்பரிய வாகை மரச்செக்கு முறையில், மிகுந்த கவனத்துடன் தயாரித்த 100% தூய இயற்கை எண்ணெய்கள் மற்றும் மண்கட்டிய நாட்டு துவரம்பருப்பு.

எங்களைப் பற்றி

பரம்பரை
பாரம்பரியம்.

பரம்பரைப் பரம்பரையாக மானாவாரிப் பயிர் (வானம் பார்த்த பூமி) விவசாயக் குடும்ப பின்னணியில் இருந்து வந்து முதல் தலைமுறை தொழில்முனைவராக உருவெடுத்திருக்கிறோம். விவசாயமே உணவு உற்பத்திதான். அதன் நீட்சியாக மரச்செக்கு எண்ணெய் & மண்கட்டிய நாட்டு துவரம்பருப்பு உற்பத்தித் தொழிலில் இறங்கியுள்ளோம்.

ஆண்டாள்"பத்தோடு பதினொன்று; அவற்றுள் ஆண்டாள் தனி என்று ஊர்போற்ற விளங்க வேண்டும்" என்னும் நோக்கத்தில் 12/12/2018 தொடங்கப்பட்டு தரத்திலும், சுவையிலும் தனித்தன்மையுடன் பயணித்து வருகிறது. எண்ணெய் வித்துக்களை வெயிலில் நன்கு உலர்த்தி வாகை மரச்செக்கில் ஆட்டி, கசடுகளைத் தெளியவிட்டு சுகாதாரமான முறையில் பாட்டில்களில் நிரப்புகிறோம். 'உயர்ந்த தரம் – உரிய விலை' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகிறோம்.

"எங்களின் குழந்தைகளுக்கு ஒருபோதும் நஞ்சினை உணவாகக் கொடுக்க மாட்டோம். ஆண்டாள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எங்களின் குடும்பத்தினர்களே!"

ஆண்டாள் மரச்செக்கு எண்ணெய்
Aandaal Traditional Wood-Pressed Oils Showcase
எங்கள் சிறப்பம்சங்கள்
  • 100% பாரம்பரிய செக்கு முறை (சூடேற்றப்படாதது)
  • தூய்மை மற்றும் தரத்திற்கான விருது
  • இரசாயனங்கள் மற்றும் பதப்படுத்திகள் இல்லை
  • 200+ விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல்
  • பாரம்பரிய வாகை மரச்செக்கு முறை
தயாரிப்பு முறைகள்

100% சுத்தமான மரச்செக்கு எண்ணெய்கள்.

வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ள